Connect with us

அதிகாலையில் ஆர்.எஸ்.பாரதி திடீர் கைது: காரணம் என்ன?

செய்திகள்

அதிகாலையில் ஆர்.எஸ்.பாரதி திடீர் கைது: காரணம் என்ன?

கடந்த பிப்.15 ஆம் தேதி சென்னையில் நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் ஆர்.எஸ்.பாரதி பேசியதாக வந்த புகார்களின் அடிப்படையில் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கைது செய்யப்பட்ட பின் ஆர்.எஸ்.பாரதி கூறியபோது, ‘‘கொரோனா தடுப்பு பொருட்கள் வாங்கியதில் முறைகேடு என கூறியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பிப்.15 ஆம் தேதி சென்னையில் தான் பேசியது சமூக ஊடகங்களில் திரிக்கப்பட்டு வெளியானதாகவும், கொரோனா சூழலில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுளார்

சென்னையில் ஆலந்தூரில் உள்ள தனது வீட்டில் அதிகாலையில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதி மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்துச் சென்றுள்ளதாகவும், அவரை ஜாமீனில் விடுவிக்க திமுக வழக்கறிஞர் அணி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன,

முன்னதாக தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து ஆர்.எஸ்.பாரதி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஆதித் தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் ஆர்.எஸ்.பாரதி மீது புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top