ரூ.60,000 ஊதியத்தில் தீயணைப்பு அதிகாரி வேலை

மத்திய அரசில்  எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் (ONGC)  காலியாக உள்ள தீயணைப்பு அதிகாரி (Fire Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.60,000 ஊதியத்தில் தீயணைப்பு அதிகாரி வேலை

காலிப்  பணியிடங்கள்:

தீயணைப்பு அதிகாரி (Fire Officer) பிரிவில் 09   பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

இளங்கலைப் பட்டம் படித்து முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ. 60,000  முதல் ரூ.1,80,000 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்  ரூ.370 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.ongcindia.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.ongcindia.com/wps/wcm/connect/7dad5a8a-7cc8-4a82-9602-5ada0275cbd0/cbtenglish.pdf?MOD=AJPERES&CONVERT_TO=url&CACHEID=ROOTWORKSPACE-7dad5a8a-7cc8-4a82-9602-5ada0275cbd0-mI1VYye என்ற இணையத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

        விண்ணப்பிக்க கடைசி தேதி:18-06-2019