கிறிஸ் கெயில் அதிரடி! பஞ்சாப் அணி வெற்றி!

ஐபில் தொடரின் 4வது போட்டி பஞ்சாப் அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் இடையே ஜெய்பூரில் நடைப்பெற்றது.

Kings XI Punjab

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர் கே எல் ராகுல் 4 ரன்களில் வெளியேறினார். மாயன்க் அகர்வால் 22 ரன்களில் வெளியேறினார். கிறிஸ் கெயில் அதிரடியாக ஆடி 47 பந்துகளில் 79 ரன்களை குவித்தார்.

இப்போட்டியில் எடுத்த ரன்களை சேர்த்து இதுவரை 4,073 ரன்களை ஐபில் போட்டிகளில் கிறிஸ் கெயில் எடுத்துள்ளார். எனவே 4,000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையும் பெற்றார்.

நிக்கோலஸ் பூரான் 12 ரன்கள் எடுத்தார். ஷர்ஃப்ராஸ் கான் 46 ரன்களும் மன்தீப் சிங் 5 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்களை எடுத்தது.

ராஜஸ்தான் அணியின் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளும், தவால் குல்கர்னி மற்றும் கவுதம் கிருஷ்ணப்பா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

அடுத்து பேட்டிங்க் செய்த ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அஜங்கியா ரஹானே 27 ரன்களும், ஜோஸ் பட்லர் 69 ரன்களும், சஞ்சு சாம்சன் 30 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 20 ரன்களும் எடுத்தனர். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களிலே ஆட்டமிழந்தனர். இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புடன் 170 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

பஞ்சாப் அணியின் சாம் கர்ரன், முஜ்தீப் சாட்ரான் மற்றும் அன்கிட் சிங் ராஜ்புட் மூவரும் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட் எடுத்தார்.

இப்போட்டியில் கிறிஸ் கெயில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.