Connect with us

கெட்ட வார்த்தை சொல்லி கத்திய ரோகித்.. மிரண்டு போன கள அம்பயர்!

விளையாட்டு

கெட்ட வார்த்தை சொல்லி கத்திய ரோகித்.. மிரண்டு போன கள அம்பயர்!

நேற்று முன் தினம் இந்தியா மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையேயான 2வது 20 ஓவர் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. 

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சினைத் தேர்வு செய்தது, முதல் ஆட்டத்தில் வாய்ப்பை நழுவ விட்ட நெருக்கடியிலேயே இருந்தது.

வங்கதேச அணியில் துவக்க வீரர்களாக லிட்டன் தாஸ், நயீம் சேர்ந்து துவக்க வீரர்களாக களமிறங்கினர். இவர்கள் ஜோடியானது நிலைத்து நின்று ஆடி, இந்திய அணிக்கு டஃப் காம்பிட்டிஷன் கொடுத்தது.

அவர்களை வீழ்த்த சுழற் பந்துவீச்சாளர் சாஹலை பந்து வீச பணித்தார் கேப்டன். சாஹல் அந்த ஓவரின் மூன்றாவது பந்திலேயே லிட்டன் தாஸ் விக்கெட்டை வீழ்த்தும்படி, பந்து வீசினார்.

கணித்ததுபோல் இந்த விக்கெட் வீழ்ந்துவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்க, ரிஷப் பண்ட் பந்தை ஸ்டம்ப்புக்கு சில இன்ச் முன்பே பிடித்து ஸ்டம்பிங் செய்தார்.

கெட்ட வார்த்தை சொல்லி கத்திய ரோகித்.. மிரண்டு போன கள அம்பயர்!

அவுட் ஆகிவிட்டார் என்று எண்ணியிருக்க மூன்றாவது அம்பயர் ஸ்டம்ப்புக்கு சில இன்ச் முன்பு பந்தை பிடித்தது விதிப்படி தவறு என்று கூறிவிட்டார்.

இதனால் ரோஹித், கோபத்தின் உச்சிக்கே போய் விட்டார். அதனைத் தொடர்ந்து அடுத்த ஓவரில் லிட்டன் தாஸ் அடித்த பந்தை ரோஹித் சர்மா பிடிப்பார் என்று நினைக்கையில் கேட்ச்சை பிடிக்காமல் விட்டு விட்டார். 

எட்டாவது ஓவரில் ரிஷப் பண்ட்டுக்கு மீண்டும் ஒரு ஸ்டம்பிங் செய்தார், இதுவும் அவுட் இருக்காது என்று எண்ணியே கேட்க, அதற்கு கள அம்பயர் அவுட் கொடுத்தார். சந்தேகத்தின் பேரில் மூன்றாவது அம்பயரிடம் முடிவைக் கேட்டனர்.

 மூன்றாவது அம்பயர் ரீப்ளே செய்து பார்த்து நாட் அவுட் என திரையில் சிக்னல் போட்டார்.

அப்போது அருகில் கள அம்பயர் இருப்பதையும் பொருட்படுத்தாது, கடுப்பான ரோஹித் சர்மா சத்தமாக கெட்ட வார்த்தை சொல்லி திட்டினார்..

 மூன்றாவது அம்பயர் அவுட் என்ற பட்டனை அழுத்துவதற்கு பதில், நாட் அவுட் பட்டனை அழுத்தி விட்டார் என மீண்டும் அறிவிக்கப்பட்டது, அப்போதுதான் ரோகித் கொஞ்சம் கூல் ஆனார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top