ஜியார்ஜியாவில் மாதவனின் ராக்கெட்டரி படப்பிடிப்பு

மத்திய அரசின் விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் விஞ்ஞானியாக இருந்தவர் நம்பி நாராயணன் அவர்கள். இருப்பினும் இவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சிறைக்கும் சென்று வந்தார்.

இவரின் வாழ்க்கையில் பல விஞ்ஞான சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவரது சாதனையை பாராட்டும் விதத்தில் நடிகர் மாதவன் இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படம் இயக்கி வருகிறார்.

முழுக்க முழுக்க நம்பி நாராயணன் ஆகவே மாறி இருக்கும் மாதவன் தோற்றத்தில் அசத்துகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜியார்ஜியாவில் நடைபெற இருக்கிறது.

அந்த படத்தின் லொகேஷன் தேர்வுக்காக ஜியார்ஜியா சென்றுள்ளார். அங்கிருந்து வீடியோ பதிவிட்ட அவர் தற்போது ஜியார்ஜியாவில் மைனஸ் 6 டிகிரி தட்பவெட்ப நிலை இருப்பதாகவும், ‘ராக்கெட்டரி’ படத்திற்கான அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இங்கு தான் நடைபெற உள்ளதாகவும் மாதவன் கூறியுள்ளார்.