ஆர்.கே சுரேஷின் தமிழும் மலையாளமும் கலந்த படம்

தயாரிப்பாளராக இருந்து தாரை தப்பட்டை படத்தின் மூலம் வில்லன் அவதாரம் எடுத்தவர் ஆர்.கே சுரேஷ். தொடர்ந்து மருது உள்ளிட்ட படங்களில் மிரட்டல் வில்லன் அவதாரம் எடுத்து மிரட்டி இருந்தார் ஆர்.கே சுரேஷ்.

அஜீத்தின் தீவிர ரசிகரான ஆர்.கே சுரேஷ் அவரது ரசிகராக பில்லா பாண்டி என்ற படத்தில் நடித்தார். கடந்த தீபாவளிக்கு அஜீத் படம் எதுவும் வெளிவராத நிலையில் இவரது பில்லா பாண்டி படம் அஜீத் ரசிகர்களுக்கு லேசான ஆறுதலை ஏற்படுத்தியது.

இவர்

தற்போது இரு மொழிப் படமொன்றில் நாயகனாக நடித்திருக்கிறார். படத்தின் பெயர் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03.’.

ஆர்யா ஆதி இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அப்துல் லத்தீப் வடுக்கோட் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் ஆர்.கே.சுரேஷ், வினோத் கிருஷன், சிவாஜி குருவாயூர், சினோஜ் வர்கீஸ், நேகா சக்சேனா, சார்மிளா, அக்ஷிதா, இரத்தினவேல், ஷஷாத் அப்துல்லா திப், அபுபக்கர், மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ஐயப்பன்.என், இசை – சன்னி விஸ்வநாத், கதை – ரிஜேஷ் பாஸ்கர்.

இப்படத்தின் கதை கொச்சியில் இருந்து சென்னைக்கும் நகர்வதால் படத்தில் தமிழ் மலையாளம் கலந்த கதையாக இப்படம் மலர்ந்திருக்கிறது.

பெண்கள் பாலியல் ரீதியான மர்மத்தை கண்டுபிடிக்கும் ஒரு படமாக இது வந்திருக்கிறது

துப்பறியும் அதிரடி போலீஸ் அதிகாரியாக ஆர்.கே சுரேஷ் நடித்துள்ளார்.