மிக ஆழ்ந்த வருத்தத்தில் ஆர்.ஜே பாலாஜி

2008ம் ஆண்டு வந்த நாயகன் படத்தின் மூலம் புகழ்பெற்றவர் ஜே.கே ரித்திஷ் அதன் முன்பே கானல் நீர் என்ற படத்தின் மூலம் சின்னிஜெயந்த் இயக்கத்தில் நடித்திருப்பார். குறுகிய காலத்தில் நாயகன் திரைப்படம் அதன் பிறகு திமுகவில் ஐக்கியமாகி நாடாளுமன்ற உறுப்பினரும் ஆனவர் ஜே.கே ரித்திஷ்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு அதாவது 11 வருட இடைவெளிக்கு பிறகு சமீபத்தில்தான் ஆர்.ஜே பாலாஜியுடன் எல்.கே.ஜி படத்தில் இணைந்து நடித்தார்.

எல்கேஜி படத்தின் 50 வது நாள் விழா கடந்த 11ல் தான் கொண்டாடப்பட்டது. இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை வாங்கிய சன் டிவி இன்று இப்படத்தை தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு ஒளிபரப்பியது.

நேற்று தேர்தல் பிரச்சாரப்பணிகளில் ஈடுபட்டிருந்த போது திடீரென மாரடைப்பால் காலமானார்.

இதற்கு பலரும் கடும் வருத்தங்களை தெரிவித்து வரும் நிலையில் எல்.கே ஜி படத்தின்போது மிகவும் நெருக்கமாக பழகிய வகையில் ஆர்.ஜே பாலாஜியும் கடும் வருத்தத்தில் உள்ளார்.

உடன்பிறவா அண்ணனை இழந்து விட்டேன். என் ஆழ்ந்த வருத்தங்கள், சிறந்த மனித நேயம் உள்ளவர்
எல்.கே.ஜி படத்தில் நடித்ததற்காக ஒரு ரூபாய் கூட நீங்கள் சம்பளமாக பெறவில்லை. உங்களை மிகவும் நேசிக்கிறேன். அவரின் சிறிய குழந்தைகளை நினைத்தும் குடும்பத்தை நினைத்தும் வேதனை கொள்கிறேன் என டுவிட் செய்துள்ளார்.

கடவுள் உங்களை கொடூரமாக பறித்துக்கொண்டார் என வேதனை கொள்வதாக ஆர்.ஜே பாலாஜி கூறியுள்ளார்.