Connect with us

கொரோனாவை விரட்ட பூமிக்குள் புதைந்து, தீ வைத்து பூஜை செய்த சாமியார்

செய்திகள்

கொரோனாவை விரட்ட பூமிக்குள் புதைந்து, தீ வைத்து பூஜை செய்த சாமியார்

கொரோனா வைரஸை உலகில் இருந்து விரட்டி அடிக்க உலக விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் போராடி வரும் நிலையில் நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த சாமியார் ஒருவர் தன்னுடைய உடலை பூமிக்குள் புதைத்து வித்தியாசமான பூஜை செய்து கொரோனாவை விரட்ட முயற்சித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தூத்துகுடியைச் சேர்ந்த சீனிவாசன் என்ற சாமியார் ஏற்கனவே 100 கிலோ மிளகாய் வத்தலை தீயில் இட்டு மழைக்காக பூஜை செய்தவர் என்பதும் பாகற்காயை வெட்டி அதில் குங்குமம் தடவி பூஜை செய்து பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது பூஜையில் ஒருசில நடிகைகளும் கலந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் தற்போது தன்னுடைய உடலை கழுத்தளவு பூமியில் புதைத்து கொண்டு சுற்றிலும் நெருப்பை பற்ற வைத்துக் கொண்டு பூஜை செய்த இவர் இந்த பூஜையால் கொரோனா வைரஸ் உலகத்தை விட்டு ஓடிவிடும் என்று அவர் கூறியுள்ளாராம். இந்த பூஜைகள் செய்வதற்கு பதில் தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள் என்று மருத்துவர்கள் மட்டுமின்றி தூத்துகுடி மக்களுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top