Connect with us

ரிஷபம் ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2019!

ராசி பலன்

ரிஷபம் ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2019!

இந்த 2019 வருடம் திருக்கணிதம் முறைப்படி மார்ச் 6-ம் தேதி ராகு-கேது பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. ராகு பகவான் கடகம் ராசியில் இருந்து பெயர்ச்சியாகி மிதுனம் ராசியில் சஞ்சரிக்கிறார். கேது பகவான் மகரம் ராசியில் இருந்து தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். கேது சனியுடன் இணைந்து தனுசு ராசியில் சஞ்சரிக்க போவதால் சனி பகவானால் ஏற்படுகின்ற கேடு பலன்களை தடுப்பார். இதுவரை அஷ்டமத்தில் இருக்கின்ற சனி பகவானால் பல வித இடையூறுகளை சந்தித்து வந்தீர்களே, இனி படிப் படியாக விலகப் போகின்றது. இனி ரிஷப ராசியினருக்கு விரிவான பலன்களை காணலாம்.

Rishabam ragu kethu peyarchi 2019

பொதுவான பலன்கள்:

இரண்டாம் இடத்தில் ராகு பகவான் இருக்கின்ற பொழுது தாராளமான பணவரவு உண்டு. இதுவரை பலவித பொருள் இழப்புகள், பண நஷ்டம், கஷ்டம் சந்தித்து வந்தீர்களே, இனி உங்களுக்கு முன்னேற்றமான காலம் வந்து விட்டது. இதுவரை கடந்த காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை எல்லாம் பாடமாக வைத்து கொண்டு வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். பூமி யோகம் உண்டு. வீடு கட்டுவது, மனை வாங்குவது எல்லாம் நல்ல படியாக நடைபெறக்கூடும்.

உற்றார், உறவினர்களிடம் இருந்த வந்த பகை எல்லாம் மறைந்து ஒற்றுமை புலப்படும். பழைய கசப்பான நிகழ்வுகளை பற்றி பேசி கொண்டு இருக்காமல், உற்றார், உறவினர்கள் இடையே நட்பை பாராட்டுங்கள். அஷ்டமத்தில் இருக்கின்ற கேதுவால் எவ்வித பாதிப்புகளும் உண்டாகாது. கேது பகவான் குருவின் வீட்டில் இருப்பதால் எவ்வித தீய பலன்களும் நடைபெறாது. வீண் விரயங்கள் உண்டாகும் என்பதால் அதனை சுப விரயங்களாக மாற்றி கொள்ளுங்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஆன்மீகப் பயணங்கள் அதிகரிக்கும். சிலருக்கு பொன், வெள்ளி மற்றும் விலையுர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பணியிடத்தில் சிலருக்கு இடமாற்றம் உண்டாகக்கூடும்.

வசதி, வாய்ப்பு பெருகும். ஆண்டின் தொடக்கத்தை விட ஆண்டின் பிற்பாதியில் லாபம் அதிகரிக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் நல்ல படியாக முடிவடையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

பணியிடத்தில் வேலை மாற்றம், ஊர் மற்றம், இடமாற்றம் உண்டாகும். உங்களுக்கு கொடுக்கின்ற பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. சிலருக்கு பணியிடத்தில் மன வேதனையும்,  நிலையற்ற தன்மையும் உண்டாகும். உங்கள் கோரிக்கைகள், எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கு தாமதம் ஏற்படலாம். குரு பகவான் அதிசாரம் பெற்று தனுசு ராசியில் மார்ச் 13-ம் தேதி வருகின்ற பொழுது வீண் விரோதத்தை ஏற்படுத்துவார் என்பதால் எதிலும் பொறுமை தேவை. 2019 அக்டோபர் மாதத்திற்கு பிறகு குரு பெயர்ச்சியாகி தனுசு ராசியில் இருக்கின்ற பொழுது  தடைகள், திருப்தியின்மை மறையும்.

வியாபாரம்/தொழில் பிரிவினர்கள்:

தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படக்கூடும். தாராளமான பணவரவு உண்டு. பகைவர்கள் தொல்லை குறையும். தொழில், வியாபாரம் விஷயமாக வெளிமாநிலம், வெளிநாடு செல்ல நேரிடும். புதிய முதலீடு விஷயத்தில் அதிக கவனம் தேவை.

மாணவ – மாணவியர்கள்:

மாணவ – மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். இந்த ஆண்டில் நல்ல மதிப்பெண்களும், விரும்பிய பாடப் பிரிவும் கிடைக்கும். மார்ச் 13-ம் தேதிக்குப் பிறகு படிப்பில் கவனம் சிதறும் என்பதால் பெற்றோர்கள் பிள்ளைகளை மேற்பார்வையில் வைத்து கொள்வது நல்லது.

குடும்பம்:

இல்லத்தில் இருப்பவர்களுடன் உற்சாகமாக காணப்படுவீர்கள். சொந்த பந்தங்கள் வருகையால் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமையான சம்பவங்கள் நிகழும். மார்ச் 13-ம் தேதி குரு அதிசாரம் பெற்று தனுசு ராசியில் சஞ்சரிக்கின்ற காலங்களில் சில பிரச்சனைகள் தோன்றி மறையக்கூடும். சிலருக்கு பொருள் இழப்பு, பணம் விரயம் ஏற்படக்கூடும். அக்கம் பக்கத்தினர் இடையே சண்டை, சச்சரவு தோன்றக்கூடும் என்பதால் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முன் பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

உடல்நலம்:

அஷ்டமத்தில் கேது பகவான் இருப்பதால் சிறு சிறு உடல் உபாதைகள் வரக்கூடும். பெரிய பாதிப்புகள் ஏற்படாது. எதிர்பாராத விதமாக மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும்.

வணங்க வேண்டிய தெய்வம்: செவ்வாய்க்கிழமை அன்று ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் போட்டு வழிபட்டு வாருங்கள். மேலும் தடைகள், தாமதம் அகல சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயரை வழிபட்டு வாருங்கள்.

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top