Connect with us

மீண்டும் சரிந்த பிக் பாஸ் 3 டிஆர்பி

பொழுதுபோக்கு

மீண்டும் சரிந்த பிக் பாஸ் 3 டிஆர்பி

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது, ஆனால் முந்தைய சீசன்களைவிட, எளிதில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட இந்த சீசன் டிஆர்பியானது ஏறியும் இறங்கியதுமாகவே உள்ளது. ஒரு நிலைப்பாட்டுடன் இருக்கவில்லை என்பதே இந்த நிகழ்ச்சியில் உள்ள சொதப்பல்களைக் காட்டுகிறது.

வனிதா வெளியேறிய பின் குறைந்த டிஆர்பியானது, மீரா மிதுனால் ஓரளவு ஈடுகட்டப்பட்டது, ஆனால் அவர் வெளியேறிய பின் மீண்டும் சுவாரஸ்யம் குறைய, அந்த இடத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் கவின்.

தயாரிப்புக்குழு செய்ய வேண்டிய வேலையினை சிறப்பாக செய்தார் கவின், அதாவது ஒரே நேரத்தில் இரண்டு பெண்களைக் காதலிப்பது, அதில் சாக்ஷி ப்ரோபோஸ் செய்ததை ஏற்றுக்கொண்டு ஒரே வாரத்தில் லோஸ்லியாமீது மறுமுறை காதலில் விழுந்தது.

எப்பிடி சாக்ஷியை கழட்டிவிடுவது என்று கவினும் ஏதேதோ செய்ய, சாக்ஷி அதனால் முழுதும் மனம் உடைந்தார், அதுவரை கம்பீரமாக சுற்றிக்கொண்டு இருந்த சாக்ஷி அதன்பின்னர் அவர் அழுமூஞ்சி சாக்சி ஆனார்.

சாக்ஷியைக் கழட்டிவிட்ட கவின் லோஸ்லியாவுடன் புதியதாக மற்றொரு காதலைக் கொண்டார். இதனால் ஓரளவு டிஆர்பி எகிறியது. அதன்பின்னர் வனிதா என்ட்ரி டிஆர்பியை கண்ணா பிண்ணாவென எகிறச் செய்தது. தற்போது இது மதுமிதா வெளியேறியதால் முழுவதுமாக சரிந்துவிட்டது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top