ரங்கராஜ் பாண்டே நடித்தது பற்றி- ஹெச் வினோத்

அஜீத் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தை ஹெச்.வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் பிரபல பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே நடிப்பது எல்லோருக்கும் தெரியும்.

இவர்தான் நடிக்கிறார் என தன் உதவி இயக்குனர்களிடம் சொல்லவும் அனைவரும் உற்சாகமாகி விட்டார்களாம். இருந்தாலும் ரங்கராஜ் பாண்டே உடனே சம்மதம் சொல்லவில்லையாம். என் பணிச்சுமைகளுக்கிடையே நடிக்க முடியுமான்னு தெரியலயே இருந்தாலும் பார்க்குறேன் என சொல்லி இருக்கிறார்.

இதற்கிடையே அவர் சூழ்நிலை காரணமாக யதார்த்தாக அவர் வேலை பார்த்த செய்தி சேனலை விட்டு வெளியேறும் நிலை வர எந்த பிரச்சினையுமில்லாமல் உடனே நடித்தாராம்.