அத்தி வரதரை தரிசிக்க குடியரசுத்தலைவர் இன்று காஞ்சிபுரம் வருகை

காஞ்சி மாநகரையே அத்திவரதர் திருவிழா விழாக்கோலம் பூண செய்துள்ளது. தண்ணீரில் இருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அதனுள்ளேயே இருந்து 40 வருடங்களுக்கு ஒரு முறையே மக்களுக்கு காட்சி அளிக்கிறார்.

தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் தரிசித்து வருகிறார்கள். காலையில் 4மணிக்கெல்லாம் அத்திவரதரை பார்க்க மக்கள் கூடி விடுகிறார்கள்.

கட்டுக்கடங்காமல் மக்கள் கூட்டம் சென்று வருகிறது. இந்த ஸ்வாமியை தரிசனம் செய்ய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காஞ்சிபுரம் வருகிறார்.

இதனால் மதியம் 1மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்களுக்கு அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.