ரம்ஜானுக்கு வரும் பக்ரீத்

ஒரு வாயில்லா ஜீவனான ஒட்டகத்தின் வலியையும் வேதனையையும் வலிக்க வலிக்க இயல்பாக சொல்லி இருக்கும் படமே பக்ரீத். நம்ம ஊர் சீதோஷ்ண நிலைக்கு ஒத்து வராத ஒட்டகம் ஒன்றை அதை வளர்க்கும் விக்ராந்த் அதன் நிலை கண்டு அதன் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற ராஜஸ்தானுக்கே கொண்டு செல்கிறார்.

அங்கு அவர் செல்லும்போது அதிகாரிகள் பலரிடம் ஒட்டகமும் அவரும் படும் துயரத்தை விளக்கி சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜெகதீசன் சுப்பு.

சிவா மற்றும் சந்தானம் நடித்த ‘யாயா’ திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் M.S.முருகராஜ், தனது இரண்டாவது படைப்பாக ‘பக்ரீத்’ திரைப்படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து வரும் ரம்ஜான் விருந்தாக திரைக்கு வருகிறது இப்படம் ஜூன் 6ம் தேதி இப்படம் வெளியாகிறது.

இப்படத்தின் ஆடியோ வரும் மே17ல் வெளியிடப்படுகிறது.