ராம்கோபால் வர்மாவை கண்டிக்கும் ஆந்திர மக்கள்

இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் படங்கள் எப்போதுமே சர்ச்சைக்குரியதாகவே இருக்கும். கொஞ்சம் வன்முறை கலந்ததாகவும் இருக்கும். அவரும் அடிக்கடி ஏதாவது கருத்து சொல்லி மாட்டிக்கொள்வார்.

படங்களிலும் ஏதாவது தவறான கருத்தை சொல்லி மாட்டிக்கொள்வார். இவரின் சர்ச்சைகள் நீண்ட நாள் தொடரும் ஒன்று. இவர் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் மொழிகளில் படம் எடுப்பதால் எல்லோருக்கும் பரிட்சயமானவர்.

நேற்று ராம்கோபால் வர்மா அடுத்து இயக்கும் அடுத்த படத்துக்கு முதல் பார்வையை வெளியிட இருந்தார். அது தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவின் வாழ்க்கை வரலாற்று படமாகும்.

அந்த படத்தை பற்றி அவர் குறிப்பிடுகையில் அமைதியான காந்தி எப்படி பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியாவை பெற்றாரோ அதே போல் ஆவேசமான சந்திரசேகர்ராவ் ஆந்திர மக்களிடமிருந்து தெலுங்கானவை பெற்றதாக கூறி இருந்தார்.

இதற்கு ஆந்திர மக்களின் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.