கவுதமிக்கு சம்பள பாக்கி தர தயார்! ஆனால்…ராஜ்கமல் பிலிம்ஸ் விளக்கம்

நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கிய இரண்டே நாளில் அவர் தனக்கு சம்பள பாக்கி வைத்துள்ளதாக அவருடன் 13 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த நடிகை கவுதமி குற்றச்சாட்டை சுமத்தியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கவுதமியின் குற்றச்சாட்டுக்கு தற்போது ராஜ்கமல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கவுதமி தான் தசவதாரம், விஸ்வரூபம் ஆகிய இரண்டு படங்களில் பணிபுரிந்ததற்காக சம்பள பாக்கி உள்ளதாக கூறியுள்ளார். இந்த இரண்டு படங்களையும் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவில்லை. எனவே அந்த படங்களின் தயாரிப்பு நிறுவனத்திடம்தான் கவுதமி சம்பள பாக்கியை கேட்டிருக்க வேண்டும்

மேலும் ராஜ்கமல் நிறுவனத்தில் கவுதமி பணியாற்றி அதற்கு சம்பளம் பெறாமல் இருந்திருந்தால் அதற்குரிய ஆதாரத்தை காட்டி பணம் பெற்றுக்கொள்ளலாம் என்று ராஜ்கமல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.