ரஜினிக்கு ஜோடி நயன்தாராவா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் கடந்த பொங்கலுக்கு வந்து வெற்றியை பெற்றது. பெருவாரியான ரஜினி ரசிகர்கள் இப்படத்தை ரசித்து பார்த்தனர் காரணம் ரஜினியின் பழைய அசத்தல் ஸ்டைல் அப்படியே வந்ததுதான்.

பிறகு ரஜினி அரசியலுக்கு வருவார் கட்சி ஆரம்பிப்பார் என்ற நிலையில் சட்டசபை தேர்தலை ஒட்டி மட்டுமே ரஜினி அரசியலுக்கு வரும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

இந்த படத்தை முழு அரசியல் படமாக எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்துக்கு நாற்காலி என்று பெயர் வைக்க பரிசீலிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் நாற்காலி பெயரை தேர்வு செய்யவில்லை என்று முருகதாஸ் மறுத்தார். தற்போது படத்தில் நடிக்கும் இதர நடிகர்-நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் பெயர் அடிபட்டது. ஆனால் இப்போது நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சந்திரமுகி படத்தில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.