ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படம் இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு

f588f70ef46f33d26cb154f09884e87d

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஏற்கனவே ’தலைவர் 168’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது அவர் நடிக்க உள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது

டிஸ்கவரி சேனல் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பும் மேன் வெர்சஸ் வைல்ட் என்ற ஆவணப் படத்தில் ரஜினி நடிக்க உள்ளார். இந்த ஆவணப் படத்தின் படப்பிடிப்பு இன்றும் நாளையும் கர்நாடக மாநிலத்தில் உள்ள புலிகள் காப்பகம் ஒன்றில் நடைபெற உள்ளது

இதற்கான மருத்துவ பரிசோதனைகள் முடிந்து இன்று முதல் ரஜினிகாந்தை இந்த ஆவணப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி இதே நிகழ்ச்சியில் நடித்துள்ளார் என்பதும் மோடியை அடுத்து ரஜினிகாந்த் இந்த ஆவணப் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...