Connect with us

சத்தியமா விடவே கூடாது: கொந்தளித்த ரஜினிகாந்த்

பொழுதுபோக்கு

சத்தியமா விடவே கூடாது: கொந்தளித்த ரஜினிகாந்த்

சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் சம்பவம் குறித்து அஜித், விஜய் தவிர கிட்டத்தட்ட அனைத்து தமிழ் திரையுலக நட்சத்திரங்களும் கொந்தளித்து தங்களுடைய டுவிட்டரில் ஆவேசமாக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். குறிப்பாக நடிகைகள் பலரும் ஆவேசமாக இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சற்று முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டரில் சாத்தான்குளம் சம்பவம் குறித்த தனது கோபத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: ’தந்தையையும் மகனையும் சித்திரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும் பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆகவேண்டும். விடக்கூடாது’ என்று கூறியுள்ளார்

ஏற்கனவே ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்தினர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top