இந்த அத்திவரதர் எப்போ வருவார்- ரஜினியை நக்கலடித்த நெட்டிசன்

கடந்த 1996ல் நடந்த தேர்தலிலேயே அப்போதைய திமுக, தாமக கூட்டணிக்கு ஆதரவளித்து அந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை திமுக கூட்டணிக்கு கொடுத்தவர் ரஜினிகாந்த்.ஆனால் இவர் பல வருடமாக அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என சொல்லி வந்தார்.

கடந்த வருடம் முன்பு அரசியலுக்கு வருவேன் விரைவில் கட்சி ஆரம்பிப்பேன் என வேறு சொன்னார். இருப்பினும் இவர் கட்சி ஆரம்பித்தபாடில்லை.

ரஜினி கட்சி ஆரம்பிக்காதது பல வருடமாக மீடியாக்களுக்கு விவாத பொருளாகி இருக்கும் நிலையில். ஒரு நெட்டிசன் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த அத்திவரதர் தன் பக்தர்களை 26 வருஷம் ஏமாத்திட்டே வரார் எப்போது எழுந்து அருள் புரிவார்..? அவருக்கே வெளிச்சம்.. என கூறியுள்ளார்.