நதிகள் இணைப்பிற்கு ரஜினி வரவேற்பு

இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நதிகள் இணைப்புக்கு வரவேற்பு தெரிவித்தார்.

பிஜேபியின் தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்புக்காக ஒரு வாரியம் அமைக்கப்படும் என பாரதிய ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இதை ரஜினி பாராட்டியுள்ளார். இதற்கு முன்பே திரையுலகம் சார்ந்த காவிரி போராட்டங்களில், ரஜினி நதிகள் இணைப்பிற்கு ஒரு கோடி கொடுப்பதாக ரஜினி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ரஜினி இன்று கூறியதாவது, காலம் சென்ற மறைந்த பிரதமர் வாஜ்பாயை நான் நேரில் சந்தித்து நதிகள் இணைப்பு குறித்து வலியுறுத்தினேன். நதிகள் இணைந்தால்தான் நாடு வளம்பெறும் எல்லோருக்கும் வேலை கிடைக்கும்.

விவசாயிகள் வளம்பெறுவர் அதனால் இந்த திட்டத்தை ஆதரிக்கிறேன். தேர்தல் அறிக்கையில் உள்ள இந்த விஷயத்தை வரவேற்கிறேன் என ரஜினி கூறியுள்ளார்.