Connect with us

ரஜினி நலமாக உள்ளார் வதந்திகளை நம்ப வேண்டாம்

பொழுதுபோக்கு

ரஜினி நலமாக உள்ளார் வதந்திகளை நம்ப வேண்டாம்

நடிகர் ரஜினிகாந்தின் 2.0 திரைப்படம் 29ம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது. அவரின் பேட்ட படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இடைவிடாது படங்களில் நடித்து கொண்டும் அரசியல் ரீதியான விசயங்களில் கவனம் செலுத்தி கொண்டும், சமூகம் சம்பந்தமாக ஏதாவது பேட்டி கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்வதையும் ரஜினி வழக்கமாகி வைத்துள்ளார்.

 

ரஜினி புதிய கட்சி ஆரம்பிப்பார் என அவரின் ரசிகர்கள் ஒருபக்கம் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ரஜினியின் உடல்நிலை குறித்து சில வதந்திகள் பரவியது.

இதுகுறித்து ரஜினியின் மக்கள் தொடர்பாளர் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் ரஜினியின் உடல்நிலையில் எவ்வித குழப்பங்களும் இல்லை வீண் வதந்தியை நம்ப வேண்டாம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Continue Reading
To Top