முதல்வர் வேட்பாளர் கமல் என்ற அறிவிப்பால் ரஜினி குடும்பத்தினர் அதிருப்தியா?

2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியும் ரஜினிகாந்த ஆரம்பிக்க உள்ள அரசியல் கட்சியும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பல அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பிரபலங்கள் கூறி வருகின்றனர் என்பது தெரிந்ததே. இதுகுறித்து ரஜினி கமல் ஆகிய இருவரும் ஏற்கனவே ஆலோசித்து வருவதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென நடிகை ஸ்ரீபிரியா, ரஜினியும் கமலும் இணைந்து தேர்தலை சந்தித்தால் கமல்தான் முதல்வர் வேட்பாளர் என அறிவித்திருந்தார். இவருடைய இந்த கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் தற்போது மீண்டும் கமல் கட்சியின் முக்கிய நிர்வாகி சிகே குமரவேல் என்பவரும் ரஜினி கமலுடன் இணைந்து தேர்தலை சந்தித்தால் கமல்தான் முதல்வர் வேட்பாளர் என்று கூறியுள்ளார்

ரஜினி, கமல் இணைவது குறித்து இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் இப்போதே கமல் தான் முதல்வர் வேட்பாளர் என அக்கட்சியினர் கூறிவருவதை ரஜினியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ரஜினி ரசிகர் மக்கள் மன்றத்தினர் ரசிக்கவில்லை கூறப்படுகிறது

மேலும் கமலுடன் இணைந்து ஒரு திரைப்படம் நடிக்கவே ரஜினி ஆழ்ந்து யோசித்து வருவதாக கூறப்படும் நிலையில் கமலுடன் இணைந்து தேர்தலை சந்திக்க ரஜினி இதுவரை எந்தப் பிடியும் கொடுக்கவில்லை என்றும் ஆனால் கமல் தரப்பினர்கள் தொடர்ந்து ரஜினியை இதற்காக முயன்று வருகிறார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது

2021 ஆம் ஆண்டு மே மாதம் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தேர்தல் நெருங்கி விட்டதால் ரஜினி என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்