ரஜினியின் புதிய படம் தர்பார்

ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் கடந்த ஜனவரி பொங்கலன்று வெளியானது. இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய சர்கார் தீபாவளிக்கு வெளியானது.

இவ்விருவரும் இணைந்து நீண்ட நாட்களாகவே ஒரு திரைப்படம் இயக்க வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்பட்டனர். அதனால் ரஜினிகாந்த் முருகதாஸ் படத்தில்தான் அடுத்ததாக நடிக்கிறார் அந்த படத்தின் பெயர் நாற்காலி என்றும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் நாற்காலி என்ற பெயர் கிடையாது வேறு பெயர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு பெயர் தர்பார் என வைக்கப்பட்டுள்ளது.

சர்க்கார் போலவே இதுவும் ஹிந்திப்பட பெயர் என்பதும், ஏற்கனவே சரத்குமார் நடிக்க அரசு தர்பார் என்ற துணைத்தலைப்போடு ஒரு படம் வந்து வெற்றியடைந்துள்ளது.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.