ரஜினிதான் தமிழகத்தின் விதியை நிர்ணயிப்பார்-கராத்தே தியாகராஜன்

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தான் சமூக வலைதளங்களின் செல்லப்பிள்ளை சமூக வலை தளங்களின் ஹாட் டாபிக் இவர். காஷ்மீர் பிரிவினைவாத தலைவரை கூட்டி வந்து மீட்டிங் போட்டதாகட்டும், மற்ற கட்சியினரை காட்டமாக தமக்கேயுரிய நக்கல் பாணியில் விமர்சிப்பதாகட்டும் சர்ச்சை செய்திகளுக்கு இவர் குறை வைத்ததில்லை.

எல்லா கட்சியினரையும் குறைகள் சொல்லும் இவர் ரஜினி கட்சி தொடங்குவது அவரின் கொள்கைகள் குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கராத்தே தியாகராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரஜினிதான் தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிப்பார். அவரை தொடர்ந்து விமர்சனம் செய்வதை சீமான் குறைத்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.