தண்ணீர் தருபவர்களுக்கு வாக்களியுங்கள்- ரஜினி

ரஜினிகாந்த் கடந்த 96ம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சிக்கு எதிராக திமுக- தமாகா கூட்டணிக்கு ஆதரவளித்தார் இதனால் உதயசூரியன் சின்னத்திலும், சைக்கிள் சின்னத்திலும் மக்கள் ஓட்டளித்து திமுக கூட்டணியை மகத்தான வெற்றி பெற செய்தனர்.

அதற்கு பின் அரசியல் நிலைப்பாடு எதுவும் எடுக்காத ரஜினி வருவேன் வருவேன் வருவேன் என்று இன்று வரை சொல்லி கொண்டு இருக்கிறார்.

சென்ற வருடம் ரசிகர்மன்ற நண்பர்களை சந்தித்து திருமண மண்டபத்தில் மீட்டிங் போட்டு விரைவில் கட்சி துவங்க இருப்பதாகவும் கூறி இருந்தார்.

இந்நிலையில் ஒரு வருடம் கடந்தும் கட்சி எதுவும் ஆரம்பிக்காததால் அவரது ரசிக தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர்.

இந்த நாடாளுமன்ற தேர்தலிலாவது கட்சி தொடங்கி போட்டி இட வேண்டும் என்று ரசிகர்கள் நினைத்திருந்த வேளையில். இப்போது எந்த கட்சியும் துவங்கபோவது இல்லை என்று ரஜினி அறிவித்து விட்டார். வருகின்ற சட்டசபை தேர்தலுக்கு பார்த்து கொள்ளலாம் என்ற வகையில் ரஜினியின் அறிவிப்பு உள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாரையும் ஆதரிக்காத ரஜினி யார் தண்ணீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து தீர்க்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவு தரும்படி ரசிகர்களை கேட்டுள்ளார்.