ரஜினியுடன் நடிக்காதது வருத்தமே- சரண்யா

ரஜினி திரையுலகில் அதிரடி காட்டிய எண்பதுகளிலேயே கதாநாயகியாக நடிக்க வந்துவிட்டவர் சரண்யா. பல நடிகர்களுடன் ஜோடி இட்டு நடித்தாலும் ரஜினிகாந்துடன் நடிக்காதது அவருக்கு உள்ள பெரும் குறைகளில் ஒன்று.

இதுவரை ரஜினியின் படங்களில் நடிக்காதது குறித்து அவர் கூறியதாவது.

ரஜினி படங்களில் நடிக்க முடியவில்லை என்ற ஆதங்கம் உள்ளது அவருடன் நடிப்பவர்களை பார்த்து பொறாமையாக உள்ளது. சாதாரண வேடம் என்றால் விட்டு கொடுத்து விடலாம். உதாரணமாக என் வயதையொத்த வேடம் காலாவில் ஈஸ்வரி ராவ் பண்ணாங்களே அது போல வேடம் என்றால் அவர்களை பார்த்து பொறாமையாகத்தான் இருக்கும் ஜாலியாக கூறினார்.