வடிவேலுவையே மிஞ்சிய ரைசா… மீம்ஸ் போட்டு கலாய்க்கும் ரசிகர்கள்!!

ரைசா வில்சன்  ஒரு விளம்பர மாடல் ஆவார், இவர் மாடலாக பல ஆண்டுகளாக இருந்தபோதிலும், இவர் விஜய் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட தமிழ் பிக் பாஸில் கலந்து கொண்டதன் மூலமே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் காயத்ரி, சக்தி போன்றோர்களுடன் கூட்டு சேர்ந்து ஓவியாவுக்கு எதிராக இருந்தாலும், இவரது அழகிற்கென்று ரைசாவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முன்னர் வேலையில்லாப் பட்டதாரி 2 வில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து இருந்த இவருக்கு அதன்பின்னர் பியார் பிரேமா காதல் என்னும் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

82a02e428e58e2219266c9f673dfb1ed

அதன்பின்னர் இவர் நடித்த தனுசு ராசி நேயர்களே திரைப்படமும் ஹிட் ஆக, ஆலிஸ், காதலிக்க யாருமில்லை, FIR, ஹேஸ்டேக் லவ் போன்ற படங்களில் நடித்து பிசியாக வருகிறார்.

அம்மணி படங்களில் மட்டும் பிசி கிடையாது, சமூக வலைதளங்களில் கவர்ச்சியாக போட்டோ பதிவிடுவதிலும் பிசிதான். அதிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதும் போதும் அம்மணி வீட்டிற்குள்ளேயே இருந்துகொண்டு விதவிதமாக போட்டோக்களை எடுத்து பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது புருவம், உதடு, மூக்கு என அனைத்து பகுதிகளிலும் கடுக்கன் மாட்டிக்கொண்டு ஒரு போட்டோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுதான் சாக்கு என்று ரசிகர்கள் போதும் போதும் என்னும் அளவுக்கு அவரை கிண்டலடித்து வருகின்றனர். வடிவேலுவின் நாய் சேகர் கெட் அப் புகைப்படங்களுடன் ரைசாவின் இந்த கெட் அப் போட்டோவையும் போட்டு மீம்ஸ் போட்டும் வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...