ஏ.ஆர் ரஹ்மான் கதை எழுதிய படம் விரைவில்

ரோஜா படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இன்று மிகப்பெரிய அங்கீகாரத்தை உலக இசையமைப்பாளர் எனும் அங்கீகாரத்தை பெற்றிருப்பவர் ஏ.ஆர் ரஹ்மான். ஆஸ்கார் உள்ளிட்ட உலகத்தின் உயரிய விருதுகளை வாங்கி குவித்த ரஹ்மான் படைத்த சாதனைகள் சொல்லி மாளாது.

எப்போதும் பிஸியாக இருக்கும் இசையமைப்பாளராகவும் நெருங்க முடியாத உயரத்திலும் ரஹ்மான் உள்ளார். அவரது பிஸியான இசைப்பணிகளுக்கிடையே அவரே கதை எழுதி இசையமைத்த படம் 99 சாங்க்ஸ்.

எடில்ஸி, எகான். லிசாரே, மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்தை ஜியோ ஸ்டுடியோவும் ரஹ்மானின் ஒய்.எம் மூவிஸும் தயாரித்திருக்கிறது.

இசைபற்றிய படமாக இது மலர்கிறது. இதை பற்றி ரஹ்மான் கூறுகையில் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வருகிறது. என் மீது காட்டும் அன்பும் உற்சாகத்துக்கும் மிக்க நன்றி என ரஹ்மான் கூறியுள்ளார். வரும் 21ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது என கூறியுள்ளார்.