ஹாலிவுட்டில் கவனம் செலுத்தும் ஏ.ஆர் ரஹ்மான்

தற்போது ஏ.ஆர் ரஹ்மான் இசையமைப்பில் சர்வம் தாள மயம் படம் விரைவில் வர இருக்கிறது. ராஜீவ் மேனன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜிவி பிரகாஷ், அபர்ணா நடித்துள்ளனர்.

ஆஸ்கார் விருதுக்கு பிறகு இந்திய மற்றும் ஹாலிவுட் படங்களை மிகவும் கவனமாக தேர்வு செய்து இசையமைத்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

கடந்த 2018-ல் ‘சர்கார்’, ‘2.0’, ‘செக்கச் சிவந்த வானம்’, அடுத்து வரவுள்ள ‘சர்வம் தாளமயம்’, இந்தியில் ‘சஞ்சு’  என திரைப்படங்கள் மற்றும் ஆல்பம் ஆகியவற்றில் அதிகம் கவனம் செலுத்தினார்.

இந்த நிலையில், 2019-ம் ஆண்டில் அதிக ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்த திட்டமிட்டு, சில படங்களை ஒப்புக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பிறகு, அந்த வேலைகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். இதற்கிடையே, கிடைக்கும் நேரத்தை மணிரத்னம், ரஜினி, ஷங்கர் போன்ற நெருங்கிய நண்பர்களின் படங்களுக்கு மட்டும் செலவிடலாம் என்றும் திட்டமிட்டிருக்கிறார்.