ரஹ்மானுக்கு கிடைத்த கவுரவம்

ரோஜா படத்தின் மூலம் உயரத்திற்கு சென்றவர் ஏ.ஆர் ரஹ்மான் அப்படத்தில் இடம்பெற்ற சின்ன சின்ன ஆசை பாட்டின் மூலம் முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார். அதற்கு பிறகு விருதுகள் பெறுவதே இவரது வாழ்க்கையாகி போனது.

ரோஜாவிற்கு பிறகு ஜெண்டில்மேன், காதலன், வண்டிச்சோலை சின்ராசு, மே மாதம், உழவன் என அந்த நேரத்தில் பிஸியோ பிஸியானார் ரஹ்மான். தொடர்ந்து ஹிந்தி பட வாய்ப்புகளும் துரத்த நாடறிந்த பிரபலமானார் ரஹ்மான். அதன் பிறகு 2008 ம் ஆண்டு இவர் ஆஸ்கார் விருது வென்ற பின் செல்வாக்கின் உச்சத்திற்கு சென்றார்.

உலக அளவில் டுவிட்டரில் பிரபலமாக உள்ள பத்து பேர் பற்றிய ஆய்வை ஒரு நிறுவனம் மேற்கொண்டது. இதில் எட்டாவது இடத்தில் அமிதாப்பச்சனும், பத்தாவது இடத்தில் ஏ.ஆர் ரஹ்மானும் என இரண்டு இந்தியர்கள் பத்து இடத்துக்குள் வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆய்வு முடிவு தன்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்