கஜா புயல்- ராகவா லாரன்ஸ் கட்டி கொடுத்த வீடுகள்

கடந்த நவம்பர் மாதம் உருவான கஜா புயல் டெல்டா மாவட்டங்களை போட்டு புரட்டி எடுத்தது பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த புயலில் வீடிழந்து வாசல் இழந்து தவித்தனர். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்களும் புதுச்சேரியின் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் வீடில்லாத சில நபர்களுக்கு வீடு கட்டி தருவதாக அறிவித்து சிலருக்கு வீடு கட்டியும் கொடுத்து வருகிறார். இப்போது அதன் பணிகள் முற்றிலும் முடிவடைந்து அவர் தேர்ந்தெடுத்த நபர்களுக்கு வீடு வழங்கி வருகிறார். கடந்த வாரம் சமூக ஆர்வலர் ஒருவருக்கு முதன் முதலில் வீட்டை வழங்கினார்.

தற்போது  வீடு வாசல் இழந்து பெரும் துயரத்தை சந்தித்த தஞ்சாவூர் மாவட்டத்தின்உள்ள கரிசைக்காடு கிராமத்தில் வாழ்ந்துவரும் செல்லகுஞ்சி பாட்டிக்கு வீட்டை ஒப்படைத்து அதன் சோகத்தை ஆற்றி இருக்கிறார்  லாரன்ஸ். அன்று பாட்டி வீடிழந்ததும் உலக அளவில் பாட்டியின் நிலைமை பேசப்பட்டது.