கொழும்பில் குண்டு வெடிப்பு நடந்த ஹோட்டலில் தங்கிய ராதிகா சரத்குமார்

கொழும்புவில் தேவாலயம் ஒன்றில் இன்று நடந்த முதல் குண்டு வெடிப்பு தாக்குதலில் சிலர் பலியாகினர். தொடர்ந்து இலங்கையில் பல இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் மொத்தம் 129 பேர் பலியாகினர்.

ரத்தம் அதிக அளவில் தேவைப்படுவதாலும் போதிய ரத்தம் இல்லாத காரணத்தினாலும் மிக மோசமான சூழ்நிலை இலங்கையில் நிலவுகிறது.

இதற்கிடையே அங்கு சென்றுள்ள ராதிகா சரத்குமாரிடம் இது பற்றி கேட்டபோது. எனது உறவினர்கள் சிலர் இங்குள்ளனர். அவர்களை காலையில் விஷயத்தை பற்றி கேள்விப்பட்டபோது தொடர்பு கொண்டு பேசினேன் அவர்களும் பதட்டமாகத்தான் இருந்தனர். நானும் பதட்டமாகத்தான் இருக்கிறேன். இந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

குண்டு வெடிப்பு நடந்த நட்சத்திர ஹோட்டலில் இரண்டு நாட்களுக்கு முன் தங்கினேன் இப்போது வேறு ஹோட்டலில் தங்கி இருக்கிறேன் என கூறியுள்ளார்.

இந்தியா இது குறித்து முன்பே எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இது நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.