கணவருக்கு பின் மனைவியும் அதே வழியில்

கடந்த 2000ங்களில் கோடீஸ்வரன் என்ற நிகழ்ச்சி மிக பிரபலமாக விளங்கியது. சன் தொலைக்காட்சி இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. ராதிகாவின் ராடன் நிறுவனத்தின் பங்கும் இந்த நிகழ்ச்சிக்கு இருந்தது. அப்போது அமிதாப் ஹிந்தியில் பிரபலமாக செய்த கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை அப்படியே தமிழில் முதன் முதலாக செய்தார்கள்.

அதிக பார்வையாளர்களை கொண்ட நிகழ்ச்சியாக இது விளங்கினாலும் இது திடீரென அந்த நேரத்தில் நிறுத்தப்பட்டது பலருக்கு வருத்தமளித்தது.

இதை சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அழகாக தொகுத்து வழங்கினார். இப்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு அவரது மனைவி ராதிகா அதே போல நடத்தும் கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சி வரும் தீபாவளி மறுநாளான 28ம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகிறது.