அதிமுகவில் மீண்டும் ராதாரவி

திராவிட கொள்கைகளில் ஊறி வளர்ந்த குடும்பம் ராதாரவியின் குடும்பம். அவரது தந்தை எம்.ஆர் ராதா திராவிட கொள்கைகள் மீது அசையாத பற்றுக்கொண்டவர் அதனால் தான் அவர் நடித்த ரத்தக்கண்ணீர் என்ற திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

ராதாரவியும் தனக்கு விவரம் தெரிந்த காலத்தில் இருந்து திமுகவில் நீண்ட காலம் பணியாற்றினார். எல்லோருக்கும் ராதாரவி ஒரு திமுக நடிகர் என்று பதிந்து போகும் அளவுக்கு இருந்தார்.

திடீரென திமுகவில் இவர் விலகி அதிமுகவில் சேர்ந்தார் பின்பு திமுக, அதிமுக என மாறி மாறி பயணித்தார். சமீபத்தில் திமுகவில் இருந்த ராதாரவி நடிகை நயன் தாராவை பற்றி தவறாக பேசிய காரணத்துக்காக திமுக கட்சி மேலிடம் இவர் மீது நடவடிக்கை எடுத்தது.

இதில் கொஞ்சம் விரக்தியில் இருந்த ராதாரவி திடீரென இன்று முதல்வர் எடப்பாடியை சந்தித்து அதிமுகவில் தன்னை மீண்டும் இணைத்துக்கொண்டார்.