Connect with us

விஸ்வரூபம் 2′ படத்துடன் மோதும் பிக்பாஸ் படம்

பொழுதுபோக்கு

விஸ்வரூபம் 2′ படத்துடன் மோதும் பிக்பாஸ் படம்

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று வரை ‘விஸ்வரூபம் 2’ திரைப்படம் போட்டியின்ரி சோலோவாக வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதே தேதியில் பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண், ரைசா நடித்த ‘பியார் பிரேமா காதல்’ என்ற படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பியார் பிரேமா காதல் படத்தின் சென்சார் பணிகள் சற்றுமுன்னர் முடிந்தது. இந்த படத்திற்கு ‘யூஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளதை அடுத்து இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

அறிமுக இயக்குனர் இளன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா, ரேகா, ஆனந்த்பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து தயாரித்துள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top