புத்துணர்ச்சி தரும் இளநீர் பாயாசம்

ஜவ்வரிசி பாயாசம், சேமியா பாயாசம், கேரட் பாயாசம், பாசிப்பருப்பு பாயாசம், அரிசி பாயாசம், அட இம்புட்டு ஏனுங்க வெஜிடபிள் பாயாசம்கூட பார்த்திருப்போம். ஆனா, இளநீர்ல பாயாசம் பார்த்திருக்கீங்களா?! இல்லையா?! அதன் செய்முறையை இன்று பார்க்கலாம்.

This image has an empty alt attribute; its file name is 41684334_1859711120771484_1603030241821851648_n-1.png

தேவையான பொருட்கள்..

கெட்டியான பால் – அரை லிட்டர்,
இளநீர் வழுக்கைத் துண்டுகள் – ஒரு கப்,
சர்க்கரை – ஒரு கப்,
ஏலக்காய்த்தூள் – சிட்டிகை,
முந்திரி – 10,
நெய் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை :

மெலிதான இளநீர் வழுக்கைகளை துண்டுகள் போடவும். அதில் சில துண்டுகளை தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள இளநீர் வழுக்கைத் துண்டுகளுடன் சர்க்கரை சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்தெடுக்கவும். அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு சூடாக்கி முந்திரி சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.அதே பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும். அதனுடன் அரைத்த தேங்காய் வழுக்கை விழுது, ஏலக்காய்த்தூள் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

 இளநீர் வழுக்கைத் துண்டுகள், முந்திரி சேர்த்து அலங்கரித்து பருகலாம்.

1/2லிட்டர் பாலுக்கு சரி பாதியாய் தேங்காய் பால் சேர்த்துக்கலாம். பாலுக்கு பதிலாய் கண்டென்ஸ்டு மில்க் 200 கிராம் சேர்த்துக்கலாம். அப்படி கண்டென்ஸ்டு மில்க் சேர்ப்பதா இருந்தால் சர்க்கரையை குறைச்சலாய் சேர்த்துக்கலாம்.

குறிப்பு: புத்துணர்ச்சி தரும். உடலுக்கு தேவையான பி காம்ப்ளக்ஸ் நிறைந்தது.