Connect with us

நீதிமன்ற வாசலில் அருள்வாக்கு கூறிய பேராசிரியை நிர்மலா தேவி

செய்திகள்

நீதிமன்ற வாசலில் அருள்வாக்கு கூறிய பேராசிரியை நிர்மலா தேவி

கல்லூரி மாணவிகளிடம் பாலியல் ரீதியாக பேரம் பேசியதாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இவருக்கு பெரிய இடத்து தொடர்பு உள்ளது. இவரது உயிருக்கு ஆபத்து உள்ளது எனவும் கூறப்பட்ட நிலையில், ஒரு வருடம் ஜெயில் வாசம் அனுபவித்த நிலையில் சில மாதங்கள் முன் ஜாமினில் வெளிவந்தார்.

இருப்பினும் வழக்கு விசாரணைக்காக ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராக நேற்று வந்த பேராசிரியை நிர்மலா தேவி திடீரென கோர்ட்டுக்குள் தனக்கு சாமி வந்தது போல செய்கைகளை செய்தார்.

கோர்ட்டுக்குள் இது போல செய்ய கூடாது என கூறிய பிறகு வெளியில் வந்தவர் அங்குள்ள மரத்தடி நிழலில் உட்கார்ந்து தனக்கு அம்மன் அருள் வந்துள்ளதாக அருள்வாக்கு கூறினார். தன்னை பற்றி புகார் கூறிய மாணவிகள் உயிருடன் இல்லை தற்கொலை செய்து கொண்டனர் எனவும் கூறினார். இவரின் புதிய அவதாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிர்மலாவின் புது அவதாரம்..! அருள்வாக்கு அட்ராசிட்டிஸ்

நிர்மலாவின் புது அவதாரம்..! அருள்வாக்கு அட்ராசிட்டிஸ் |#NirmalaDevi | #Professor

Posted by Polimer news on Monday, 8 July 2019
Continue Reading

அதிகம் படித்தவை

To Top