Connect with us

ராகுலுக்கு திருமணம் ஆகவில்லை அதனால் பிரியங்கா வந்துள்ளார்-அமித்ஷா

செய்திகள்

ராகுலுக்கு திருமணம் ஆகவில்லை அதனால் பிரியங்கா வந்துள்ளார்-அமித்ஷா

தேர்தல் நெருங்கி வருவதையொட்டி காங்கிரசும், பிஜேபியும் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் கூட்டங்களை மாநிலங்கள் தோறும் நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சி ராகுலை விட்டு விட்டு பிரியங்காவை முன்னிலை படுத்தி வருகிறது.

இந்நிலையில் பிரியங்கா அரசியலுக்கு வந்தது பற்றி அமித்ஷா விமர்சித்துள்ளார்.

ராகுல்காந்திக்கு திருமணம் ஆகாததால், பிரியங்காவை காங்கிரஸ் கட்சி அரசியலுக்கு கொண்டு வந்திருப்பதாக பாஜக தலைவர் அமித்ஷா விமர்சித்துள்ளார்.

கோத்ராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் தொண்டர் பிரதமர் ஆவதைப் பற்றி நினைக்க முடியுமா என கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் கட்சியில் பிறப்பின் போதே பிரதமர் பதவி முன்பதிவு செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு திருமணம் ஆகவில்லை என்பதால், பிரியங்கா காந்தி அரசியலுக்கு வந்துள்ளார் என்றும் அமித்ஷா விமர்சித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top