தீபாவளி பட்டாசை எதிர்த்த பிரியங்கா சிகரெட் பிடிக்கலாமா- சர்ச்சை

கடந்த வருட தீபாவளிக்கு உச்சநீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் இரவு 10மணிக்கு மேல் பட்டாசு வெடிக்க கூடாது. குறிப்பிட்ட சில மணி நேரங்கள்தான் வெடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

தலைநகர் டெல்லியில் காற்றில் மாசு அதிகரித்து இருந்ததால் அங்கு விதிக்க வேண்டிய தடையை இந்தியா முழுவதும் விதித்து இருந்தது.

சுற்றுச்சூழல் ஆர்வலர் என்று நடிகை பிரியங்கா சோப்ரா போன்றவர்களும் இதை கடுமையாக எதிர்த்தனர்.

சமீபத்தில் பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனசுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி இருந்தது.

வருடத்துக்கு ஒருமுறை வெடிக்கும் பட்டாசு சிவகாசி போன்ற இடங்களில் ஒரு வருட உழைப்பில் பல தொழிலாளர்களால் தயாரிக்கப்படுகிறது. இது போல உத்தரவுகளால் பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் அனைத்தும் அழிக்கப்படுவதாக கூறப்பட்டு வரும் நிலையில் பட்டாசு வெடிப்பதை எதிர்க்கும் பிரியங்கா இப்படி சிகரெட் பற்றவைத்து சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தலாமா என கேள்வி எழுந்துள்ளது