பிரியங்காவுக்கு எதிராக வெடித்தது பட்டாசு சர்ச்சை

நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் தனது காதலரான நிக் ஜோனசை திருமணம் செய்து கொண்டார். ஜோத்பூர் அரண்மனையில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

பட்டாசு வெடிப்பதற்கு சமீபத்தில் கடும் கட்டுப்பாடுகளை உச்சநீதிமன்றம் விதித்து இருந்தது. டெல்லியில் மட்டும் மாசு அதிக அளவில் உள்ளது என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு இந்தியா முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

தீபாவளி அன்று இரண்டு மணி நேரம்தான் வெடிக்க வேண்டும் என்ற உத்தரவு தமிழக மக்களை கோபப்படவும் வைத்தது.

இந்நிலையில் பட்டாசுவுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் பிரியங்கா சோப்ரா ஆஸ்துமா, நோயாளிகள், விலங்குகள் போன்றோருக்காக பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என பிரச்சாரம் செய்து வந்தார்.

இந்த நிலையில் அவரது திருமணத்துக்கு அதிக அளவிளான பட்டாசுகள் வெடிக்கப்பட்டது இதற்கு பல பொது நல ஆர்வலர்கள், அவரை சமூக வலைதளங்களில் பாலோ செய்பவர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த தீபாவளிக்கு பட்டாசுகளைத் தவிருங்கள். தீபாவளி என்பது லட்டு மற்றும் தீப ஒளிக்கான நாள். அதை அன்பால் நிரப்புவோம். மாசால் அல்ல. பட்டாசுகளைக் குறைப்பீர். அதனால் என்னைப் போன்ற ஆஸ்துமா நோயாளிகளும் ஏன் விலங்குகளும்கூட இந்த நாளை இன்புற்றுக் கழிக்கலாம்” எனப் பேசியிருந்தார்.

இதைக் குறிப்பிட்டு ட்விட்டரில் ஒருவர், “பரவாயில்லையே சிப்லா பிரியங்காவின் ஆஸ்துமாவை இமைக்கும் நேரத்துக்குள் சரி செய்துவிட்டதே.. பாருங்கள் அவர் திருமண நிகழ்ச்சியில் பட்டாசுகள் வெடிப்பதைப் பார்த்து மகிழ்கிறார்” எனப் பதிவிட்டுள்ளார்.