பிரியங்கா நிக் ஜோனஸ் ஆடிப்பாடிய வீடியோ

பிரபல பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா அமெரிக்க பாப் இசைப்பாடகர் நிக் ஜோனசை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். திருமணம் செய்ய முடிவெடுத்த இந்த ஜோடி, ஜோத்பூர் அரண்மனையில் உறவினர்கள் நண்பர்கள் புடை சூழ திருமணம் செய்து கொண்டனர்.

எனினும் இந்த திருமணத்தின் புகைப்படங்கள் ஒன்றிரண்டை தவிர பெரும்பாலும் வெளியே வரவில்லை. நிக்-ப்ரியங்கா சோப்ராவின் திருமண புகைப்படங்களின் உரிமையை அவர்கள் ஒரு பத்திரிகைக்கு விற்றுவிட்டனர்.

எனினும் ப்ரியங்காவும் நிக் ஜோனசும் ஆடிப்பாடிய ஒரு வீடியோவை பிரபலமான வோக் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.