அனைவருக்கும் நன்றி தெரிவித்த ப்ரியங்கா- நிக் ஜோனஸ்

2000ல் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ப்ரியங்கா சோப்ரா, தமிழன் படத்தின் மூலம் தமிழில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார். இந்த சினிமா அறிமுகத்தின் மூலம் தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

பாலிவுட்டை தொடர்ந்து ஹாலிவுட்டிலும் சில படங்களில் நடிக்க சென்ற ப்ரியங்கா சோப்ராவுக்கு பிரபல பாப் பாடகரான 26 வயதேயான நிக் ஜோனசுடன் காதல் ஏற்பட்டது. நிக் ஜோனஸ் பிரியங்கா சோப்ராவை விட 10 வயது குறைந்தவராவார்.

இவர்களின் காதல், திருமணமாக மலர்ந்து சமீபத்தில் ராஜஸ்தான் ஜோத்பூர் அரண்மனையில் இருவருக்கும் திருமணம் நடந்தது.

இந்த திருமணம் நடந்து முடிந்த பிறகு நேற்று நடந்த வரவேற்பில் ப்ரியங்கா சோப்ராவும், நிக் ஜோனசும் பேசினர்.

இது இந்தியாவில் என்னுடைய முதல் நிகழ்ச்சி என்று நிக் ஜோனஸ் பேசினார்

உறவினர்கள், நண்பர்கள், பத்திரிக்கையாளர்கள் என அனைவருக்கும் ப்ரியங்காவும், நிக் ஜோனசும் நன்றி தெரிவித்தனர் .