விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர்.. வெளியானது தகவல்!!

பிரியா பவானி சங்கர்  புதிய தலைமுறையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி, தமிழக இளைஞர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதன்பின்னர் இவருக்கு, விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை எனும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த சீரியலினை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு பிரபலமான இவருக்கு இல்லத்தரசிகள் முதல் அனைவரும் ரசிகர்களாயினர். அதன் பின்னர் வெள்ளித் திரையில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு மேயாத மான் படத்தின் மூலம் கிடைத்தது.

58fae0205899fc544f04e90c1e907d6a

முதல் படமே மிகவும் பிரபலமானதை அடுத்து, கடைக்குட்டி சிங்கம், மாபியா, மான்ஸ்டர் படத்திலும் நடித்துள்ளார்., தற்போது இவர், குருதி ஆட்டம், காதலில் சந்திப்போம், கசடதபற, பொம்மை, இந்தியன் 2 படங்களில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில் பிரியா பவானி சங்கர், விஷாலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அந்தப் படத்தினை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்க உள்ளதாகவும், இயக்குனர் கார்த்திக் தங்கவேலு இயக்க உள்ளதாக கூறப்படுகின்றது, லாக்டவுனில் கதை கேட்ட பிரியா பவானி சங்கர் இந்தப் படத்தில் நடிக்க ஓகே சொல்லி விட்டதாகவும் கூறப்படுகின்றது.

கையில் உள்ள படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு இப்படத்தில் நடிப்பார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.