கொரோனா சிகிச்சைக்கு 12.20 லட்சம் ரூபாய் வசூல்: சென்னை தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை

கொரோனா சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசம் என்றாலும் தனியார் மருத்துவமனையில் அவர்கள் இஷ்டத்துக்கு சிகிச்சைக் கட்டணம் வாங்கி வந்ததாக புகார்கள் வந்தது

இதனை அடுத்து தமிழக அரசு சமீபத்தில் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது குறித்த ஒரு அறிவுறுத்தலை தெரிவித்துள்ளது

இதன்படி தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு பொது வார்டில் நாள் ஒன்றுக்கு ரூபாய் 5,000 முதல் 7,000 ரூபாய் கட்டணமும், தீவிர சிகிச்சை பிரிவில் கொரோனா நோயாளிகளுக்கு தினமும் ரூபாய் 15,000 வரை கட்டணமும் வசூலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது

இந்த நிலையில் சென்னை கீழ்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா சிகிச்சைக்கு 19 நாட்களுக்கு 12.20 லட்சம் ரூபாய் வாங்கி வந்ததாக புகார் எழுந்தது

இந்த புகாரை அடுத்து அதிரடியாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசின் சுகாதாரத்துறை அந்த தனியார் மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்கான உரிமையை ரத்து செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது

மேலும் கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது