அப்பாடா ஒருவழியாக வீடு வந்து சேர்ந்த பிரித்விராஜ்…

சீனாவில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் உலகின் பலநாடுகளையும் பாதிப்பிற்கு ஆளாக்கியுள்ளது. தற்போதுவரை தடுப்பூசிகளோ, மாற்று மருந்துகளோ கண்டுபிடிக்க முடியாத நிலையில் நமக்கு இருக்கும் ஒரே ஆப்ஷனாக ஊரடங்கு இருந்துவருகின்றது.

ஊரடங்கின் பின்னர் அனைத்துவகையான படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளிலும் விமானப் போக்குவரத்து சேவையானது முடக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் வெளிநாடு சென்றவர்கள் இந்தியா திரும்பமுடியாமல் திணறி வந்தனர்.

d36525e3fa70fc4c0a8530c3bce49845-1

அந்தவகையில் நடிகர் பிரித்விராஜ் ஆடுஜீவிதம் படத்தில் நடிப்பதற்காக ஜோர்டான் நாடு சென்றிருந்தார். விமான சேவைகள் நிறுத்தப்பட அவர் வீடு திரும்ப முடியாமல் இருந்துவந்தார்.

மேலும் பாலைவனத்தில் உணவு கிடைப்பதும் சிரமமாக உள்ளது என அவர் வலைதளங்களில் பதிவிட அவரது தாயார் படக் குழுவினரை மீட்டு வரச் செய்யுங்கள் என்று கேரள அரசிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

இந்தநிலையில் கடந்தவாரம் ஜோர்டான் பாலைவனத்தில் ஆடுஜீவிதம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்தநிலையில் வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

அந்தத் திட்டத்தின்படி, ஆடு ஜீவிதம் படக்குழுவினர் 57 பேர் விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். டெல்லியில் இருந்து கொச்சின் வந்தடைந்த அவர்கள் தற்போது தங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...