பாண்டியராஜன் மகனுடன் ஜோடி சேரும் ஓவியா

களவாணி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஓவியா அதன் மூலம் மக்கள் மனதில் பிரபலமானார். அந்த வாய்ப்புகளை தொடர்ந்து பின்பற்றாதால் திரையுலகில் பின் தங்கினார். யாரும் எதிர்பாராத வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி அவரை உயரத்துக்கு ஏற்றி விட்டது.

இந்த நிலையில் 90 எம்.எல் என்ற அடல்ட் படத்தில் நடித்ததால் பல சினிமா விமர்சகர்களின் பேச்சுக்கும் ஆளாகி இருக்கிறார்.

இப்போது பாண்டியராஜன் மகன் பிரித்வியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். கணேசா மீண்டும் சந்திப்போம் என்பதே படத்தின் தலைப்பு. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது