விமானத்தில் ஏற ப்ரீத்தி ஜிந்தாவுக்கு அனுமதி மறுப்பா

பிரபல விமான நிறுவனம், கே ஏர் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் நடிகை ப்ரீத்தி ஜிந்தா ஏற மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ப்ரீத்தி முன்பதிவு செய்து இருந்ததால் முன் பதிவு செய்த ஒருவரை ஏற விடாமல் தடங்கல் செய்வது தவறு என சமூக வலைதளங்களில் பரவுகிறது.

இந்த பிரச்சினைக்கு காரணமாக கூறப்படுவது என்னவெனில் இந்த விமான நிறுவனம் நெஸ்வாடியா என்ற தொழிலதிபருக்கு சொந்தமானது. இந்த தொழிலதிபரைத்தான் ப்ரீத்தி ஜிந்தா காதலித்ததும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை இருவரும் சேர்ந்து நடத்தியதும் அனைவருக்கும் தெரியும்.

சில நாட்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இது நடந்ததாக கூறப்படுகிறது.