Connect with us

பார்த்திபனின் ‘உள்ளே வெளியே 2’ படத்தில் பிரபுதேவா?

பொழுதுபோக்கு

பார்த்திபனின் ‘உள்ளே வெளியே 2’ படத்தில் பிரபுதேவா?

பார்த்திபன் இயக்கி நடித்த ‘உள்ளே வெளியே’ திரைப்படம் கடந்த 1993ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் 25 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்த பார்த்திபன் இந்த படத்தில் பிரபுதேவாவை நாயகனாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம். அதுமட்டுமின்றி இந்த படத்தில் அவரும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது
ஜேம்ஸ் பாண்டு’, `சுயம்வரம் ஆகிய படங்களுக்கு பின்னர் பார்த்திபன், பிரபுதேவா இருவரும் மீண்டும் இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சமுத்திரக்கனி ,  ஆடுகளம் கிஷோர், ரோபோசங்கர், மம்தா மோகந்தாஸ், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர்களும் சில முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். நடிக்கவுள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபுதேவா ஏற்கனவே யங் மங் சங், லக்‌ஷ்மி, சார்லி சாப்ளின் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Continue Reading

அதிகம் படித்தவை

To Top