Connect with us

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் பிரபு

பொழுதுபோக்கு

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் பிரபு

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடம் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் உள்ளது. அங்கு அவருக்கு கோவில் எழுப்பபட்டுள்ளது. வருடா வருடம் இங்கு குருபூஜை விழா நடக்கும்.

மதயானைக்கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் பாக்யராஜ் மகன் சாந்தனுவை வைத்து இயக்கி வரும் படம் இராவணக்கோட்டம்.

ஏற்கனவே இவர் மதயானைக்கூட்டம் படத்தை இயக்கியுள்ளார். இது இராமநாதபுரம் பகுதிகளின் மக்கள் வாழ்க்கை முறை பற்றிய கதை. இப்பகுதியை சேர்ந்தவர்தான் இயக்குனர்.

இவர் சில வருட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இயக்கி வரும் படம்தான் இராவணக்கோட்டம். இந்த படம் இராமநாதபுரம் மண் சார்ந்து தயாராகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங்குக்காக இப்பகுதிகளில் தங்கியுள்ள இளையதிலகம் பிரபு இன்று தேவர் நினைவிடத்தில் வந்து வழிபட்டு சென்றார்.

அப்பா சொல்வார் இங்க போயிட்டு வர சொல்லி அதற்கு சரியான சூழல் அமையாமல் இருந்தது. இப்போதுதான் இவரின் நினைவிடத்துக்கு முதன் முதலா வர்றேன் மனதுக்கு நல்லா இருந்தது ராவணக்கோட்டம் படத்துக்காக இரண்டு நாட்களாக இங்கதான் நான் தங்கி இருக்கேன் என்று கூறினார் பிரபு

Continue Reading
To Top