கடத்தப்பட்ட பவர் ஸ்டாரின் மனைவி மீட்பு

லத்திகா என்ற படத்தின் விளம்பரத்தின் மூலம் மீடியாக்களால் அதிக கேலி கிண்டலுக்குள்ளாக்கப்பட்டு அதன் மூலம் பரபரப்பு அடைந்து சினிமா உலகில் அனைவருக்கும் தெரிந்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன்.

மதுரையை சேர்ந்தவரான இவர் அக்குபங்சர் வைத்தியம் செய்து வருபவராவார்.

சினிமாவில் பல படங்களில் காமெடி செய்து வருகிறார். டிவி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார்.

இந்த நிலையில் இவரின் மனைவி ஜூலி தனது கணவர் சீனிவாசனை காணவில்லை என போலிசில் புகார் கொடுத்திருந்தார்.

சில நாட்களில் ஊட்டியில் சீனிவாசன் இருந்ததை தெரிந்து கொண்ட போலீஸ் அவரிடம் விசாரிக்கையில் தான் ஊட்டியில் இருப்பதாகவும் தன் மனைவி ஜூலியும் ஊட்டியில் இருப்பதாக கூறினார்.இந்நிலையில் சென்னை திரும்பிய பவர் ஸ்டார் தன் மனைவியை சிலர் ஊட்டியில் கடத்தி வைத்திருப்பதாக புகார் அளித்தார்.

அதை ஏற்ற போலீசார் ஊட்டி சென்று பவர் ஸ்டாரின் மனைவியை மீட்டதோடு 4 பேரை கைது செய்துள்ளனர். முழு விபரம் விசாரணையில் தெரிய வரும்.